Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. இன்னும் 5 வருடங்களில் இது இருக்கவே இருக்காது…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. அதேசமயம் மக்களின் கோரிக்கைகள் உடனடியாக பரிசளிக்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற ஐந்து ஊராட்சிகளின் குறைகேட்பு முகாம் நேற்று நடைபெற்றது. அந்த முகாமில் தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் மாவட்ட ஆட்சியர் என முக்கிய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

பொதுமக்களின் மனுக்களை பெற்றுக்கொண்ட அமைச்சர் முறையான கோரிக்கைகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் முறையற்ற மற்றும் தகுதி இல்லாதவர்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு அதிகாரிகள் மூலம் பதில் அளிக்கப்படும் என தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் அடுத்த ஐந்து வருடங்களில் வீடு இல்லாத அனைவருக்கும் அரசு இலவசமாக வீடு வழங்கிய தமிழகத்தை குடிசைகள் அற்ற மாநிலமாக மாற்ற உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அமைச்சரின் இந்த அறிவிப்பு தமிழக மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |