Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. இன்று(ஆகஸ்ட் 13) காலை 10 – மதியம் 1 மணி வரை…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு சார்பாக ரேஷன் அட்டைதாரர்களுக்காக நடத்தப்படும் குறைதீர்ப்பு முகாம் ஆகஸ்ட் 13ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழக முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படுகிறது. அதன்படி ஆகஸ்ட் மாதத்திற்கான குறை தீர்ப்பு முகாம் இன்று  நடைபெறும்.சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் ஆகஸ்ட் 13ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை நடைபெற உள்ளது.

இந்த முகாமில் பொதுமக்கள் தங்களது குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட அனைத்து பதிவுகளையும் மேற்கொள்ளலாம். மேலும் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க நேரில் வர முடியாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று இந்த முகாமில் வழங்கப்படுகிறது. பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் தனியார் சந்தைகளில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதாவது இருந்தால் அவற்றை பொதுமக்கள் இந்த முகாமில் தெரிவித்தால் உடனடி தீர்வு காணப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |