Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…! இன்று(ஜூன் 7) முதல் 3 நாட்கள்…. ரேஷன் கடை இயங்காது…. முக்கிய அறிவிப்பு …!!!!!

ரேஷன் கடை ஊழியர்கள் ஜூன் மாதம் 7 முதல் 9ஆம் தேதி வரை அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதுமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். நாகையில் தமிழக அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற பிறகு அரசு பணியாளர்கள் சங்க போராட்டக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கு.பாலசுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, ஜூன் 10ஆம் தேதி மாநிலம் முழுவதும் அரசு பணியாளர்களை திரட்டி முதல்-அமைச்சரை சந்திப்பதற்கான காத்திருப்பு போராட்டம் நடத்துவது என்றும், தமிழக அரசு பணியாளர்கள் சங்கத்தோடு இணைக்கபட்டுள்ள தமிழக அரசின் ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஜூன் மாதம் 7, 8, 9 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |