தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணியானது கடந்த வருடம் ஜனவரி 16ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதையடுத்து கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரையிலும் 25 மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று முடிந்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் 26-வது மெகா தடுப்பூசி முகாம் இன்று (சனிக்கிழமை) 50 ஆயிரம் மையங்களில் நடைபெற்று வருகிறது. இந்த பணியில் 1 லட்சத்திற்கும் அதிகமான சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆகவே தகுதியானவர்கள் தடுப்புசி செலுத்திக்கொண்டு கொரோனா தொற்றில் இருந்து இனிவரும் காலங்களில் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.