தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. இதையடுத்து தற்போது முதலமைச்சராக மு.க ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் கொரோனாவை கட்டுப்படுத்த பல சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. அந்தவகையில் மக்கள் கொரோனாவால் கடுமையான நிதி நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ள நிலையில் மக்கள் நலனை கருத்தில் கொண்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4000 வழங்கப்படும் என்ற கோப்பில் கையெழுத்திட்டார்.
இதன் முதற்கட்டமாக இம்மாத இறுதிக்குள் ரூபாய் 2000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இதன் முதல் தவணையாக ரூ.2000 இந்த மாத இறுதிக்குள் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்ததையடுத்து இன்று முதல் ரூ.2000 வழங்கப்படுகிறது. இதையடுத்து டோக்கன் முறையில் வழங்க ரேசன்கடைகளில் ஏற்பாடு நடைபெறுகிறது. எனவே மக்கள் கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளுடன் கொரோனா நிவாரண நிதியை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.