வாக்காளர் பட்டியலுடன் ஆதார் கார்டு இணைக்கும் வகையில் கடந்த ஆண்டு இறுதியில் மத்திய அரசு சட்டத்திருத்தம் நிறைவேற்றியது. இந்தப் புதிய சட்ட திருத்தம் மூலமாக ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்காளராக பதிவு செய்வது தடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்தது. அதுமட்டுமல்லாமல் 18 வயது நிரம்பியவுடன் வாக்காளராக பதிவு செய்யக்கூடிய வகையில் வருடத்திற்கு 4 கட்-ஆஃப் தேதிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அனைத்து வாக்காளர்களும் தாமாக முன்வந்து ஆதாரை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அறிவித்துள்ளார். இன்று ஆகஸ்ட் 1 முதல் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஒருவேளை இணைக்கவில்லை என்றால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்க கூடாது என்றும் கூறியுள்ளார்.