Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே….! உங்கள் ஏரியாவில் மின்தடையா…? உடனே இதை செய்யுங்க….. அமைச்சர் அறிவிப்பு….!!!!

கோடைக் காலத்தில் மின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், மின் வினியோகம் மற்றும் மின் தடை உள்ளிட்டவை குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய அவர், “இலவச மின் இணைப்பிற்காக விவசாயிகள் காத்திருந்த காலம் முடிந்துவிட்டது. இப்போது அனைத்து விவசாயிகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளன. கோடைக் காலத்தில் வழக்கமாக மின் நுகர்வு அதிகரிக்கும். இதற்குத் தேவையான ஆலோசனை நடத்தி உள்ளோம். இதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்கும் பணிகளையும் தொடங்கி உள்ளோம்.

நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மின் உற்பத்தி குறையக் கூடாது என்பதற்காக சுமார் 4.80 லட்சம் டன் நிலக்கரி கோரி டெண்டர் விடப்பட்டு உள்ளது. வரும் காலத்தில் உயரும் மின் தேவையைக் கணக்கில் கொண்டு தமிழகம் முழுவதும் 216 துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. கடந்த மார்ச் 29ஆம் தேதி தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 17196 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

அதேபோல ஆங்காங்கே ஏற்படும் மின் வினியோக பிரச்சினையைச் சீர் செய்யும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பொது மக்களுக்கு ஒரு வேண்டுகோள். மின் வினியோகம் குறித்து சமூக வலைத்தளங்களில் மின்சார வாரியத்தை டேக் செய்யும் போது, உங்கள் இணைப்பு எண்ணையும் சேர்த்துப் பதிவிடுங்கள். அப்போது தான் விரைந்து நடவடிக்கை எடுக்க முடியும். மாநிலத்தில் தற்போது பராமரிப்புப் பணிகள் காரணமாகவே மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது,

மற்றபடி சீரான மின் வினியோகம் இருந்து வருகிறது. தமிழகத்தில் மின் பற்றாக்குறையால் மின் வினியோகம் நிறுத்தும் சூழல் இல்லை. இதற்காக முதலமைச்சர் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளார். அதேபோல மின்வாரிய செலவினங்களைக் குறைக்கப்பட்டு அதன் மூலம் ரூ 2,200 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

Categories

Tech |