தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது, “திமுக வரவர அதிகமாக பொய் கூற ஆரம்பித்து விட்டது. திமுகவின் 8 ஆண்டுகால ஆட்சியை 80 ஆண்டுகால ஆட்சி போல மக்களுக்கு சலிப்பை ஏற்படுத்தி விட்டது. இந்தியா முழுவதும் 80 லட்சம் கழிவறைகள் கட்டிக் கொடுத்தது பாஜக அரசு. அதோடு மட்டுமல்லாமல் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் மூலம் ஏழைகளையும் சொந்த வீட்டில் குடியமர வைத்தது.
மக்களை முதன் முதலாக வங்கி கணக்கு தொடங்கி வைத்தவர் பிரதமர் மோடி. அதோடு அவர்களுக்கு 500 ரூபாயாக 3 தவணை என மொத்தம் 1500 ரூபாய் செலுத்தியது மத்திய பாஜக அரசு. அது எல்லாம் இந்த தேர்தலுக்காக தான் கொடுக்கப்பட்டது. அதையெல்லாம் மக்கள் நினைத்துப் பார்க்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார். இதனை கேட்டுக்கொண்டிருந்த வாக்காளர் பெருமக்கள் அண்ணாமலை என்ன புதிய கதை கூறுகிறார் என வாய்விட்டு சிரித்தனர்.