நாடு முழுவதும் ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளும் சமையல் சிலிண்டர் விலை மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் டிசம்பர் 1ஆம் தேதி சிலிண்டர் விலை தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த மாதம் விலைமாற்றம் எதுவும் இல்லாததால் கடந்த மாதம் விற்பனையான அதே விலையில் சிலிண்டர் விற்பனை செய்யப்படுகிறது. டெல்லியில் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் 1744 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனைப் போலவே 14 புள்ளி இரண்டு கிலோ எடை கொண்ட வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை 1003 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ஒவ்வொரு மாவட்டத்திலும் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அரியலூர் – ரூ.1090.50
சென்னை – ரூ.1068.50
கோவை – ரூ.1082
கடலூர் – ரூ.1089
தர்மபுரி – ரூ.1091
திண்டுக்கல் – ரூ.1095
ஈரோடு – ரூ.1087.50
காஞ்சிபுரம் – ரூ.1068.50
கரூர் – ரூ.1107.50
மதுரை – ரூ.1094
நாகப்பட்டினம் – ரூ.1074
நாகர்கோவில் – ரூ.1137
நாமக்கல் – ரூ.1099.50
ஊட்டி – ரூ.1099.50
பெரம்பலூர் – ரூ.1108.50
புதுக்கோட்டை – ரூ.1099
ராமநாதபுரம் – ரூ.1102.50
சேலம் – ரூ.1086.50
சிவகங்கை – ரூ.1108
தஞ்சாவூர் – ரூ.1089
தேனி – ரூ.1110.50
திருவள்ளூர் – ரூ.1068.50
திருச்சி – ரூ.1099
திருநெல்வேலி – ரூ.1118.50
திருப்பூர் – ரூ.1090.50
திருவண்ணாமலை – ரூ.1068.50
திருவாரூர் – ரூ.1074
வேலூர் – ரூ.1090
விழுப்புரம் – ரூ.1070
விருதுநகர் – ரூ.1094
தமிழகத்தின் சராசரி சிலிண்டர் விலை – ரூ.1092.02