தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் ஏழை எளிய மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கும் ரேஷன் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணம். ரேஷன் அட்டை வைத்துள்ள அனைவரும் மாதம் தோறும் ரேஷன் பொருட்களை தவறாமல் வாங்கி வருகின்றனர்.
ஆனால் சில சமயங்களில் ரேஷன் கடைகள் திறந்து இருக்கிறதா என தெரியாமல் மக்கள் அலையும் நிலை ஏற்படுகின்றது. எனவே மக்களின் அலைச்சலைப் போக்கும் வகையில் வீட்டிலிருந்து கொண்டே ரேஷன் கடைகள் திறந்து இருக்கின்றதா என்பதை ஆன்லைன் மூலம் தெரிந்து கொள்ளும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி உங்கள் ஊரில் இருக்கும் ரேஷன் கடை இன்று திறந்து உள்ளதா என அறிந்து கொள்ள https://www.tnpds.gov.in/என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
அதில் பொது விநியோகத் திட்ட அறிக்கைகள் என்பதை கிளிக் செய்து நீங்கள் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர் எந்த பகுதியை சேர்ந்தவர் என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதில் உங்களது ஊரின் விவரங்கள் அனைத்தும் திரையிடப்படும்.அதில் கடை திறந்து உள்ளது என்றால் ஆன்லைன் என்றும் கடை திறக்கவில்லை என்றால் ஆப்லைன் என்றும் சிவப்பு நிறத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். கடை திறந்து ஆன்லைன் காட்டினால் பச்சை நிறத்தில் இருக்கும்.
இதன் மூலமாக உங்களது ரேஷன் கடை இருப்பு நிலையை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.அதற்கு பொருட்கள் இருப்பு நிலை என்பதை கிளிக் செய்தால் எந்த பொருட்கள் எவ்வளவு உள்ளது என்ற விவரங்களையும் அதில் தெரிந்து கொள்ள முடியும். இந்த பக்கத்தில் பொதுமக்கள் ரேஷன் கடைகள் குறித்து புகார் தெரிவிக்கலாம்.அந்த புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதையும் இதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும் என அரசு தெரிவித்துள்ளது.