Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே… உடனே இந்த வீடியோவை பாருங்க…. ஷேர் பண்ணுங்க…!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அது மட்டுமன்றி பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி அமலுக்கு வந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் மே மாதம் மத்தியில், அதாவது 10 ஆம் தேதிக்கு மேல்கொரோனா உச்சத்தில் இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பெரும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். அதனால் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு மே 3ஆம் தேதி முதல் தமிழகத்தில் பகல் நேர ஊரடங்கு அமல் ஆகும் என்று பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் மாரி 2 திரைப்படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் உலகம் முழுவதும் ஹிட் அடித்தது. இந்தப் பாடலை மருத்துவர் பாஸ்கர் விழிப்புணர்வு பாடலாக மாற்றியுள்ளார். “ஏய் ரொம்ப உப்பு போடாதே ரொம்ப எடை கூடாது” என்று தொடங்கும் இந்த பாடலை கேட்டு, அதன்படி நீங்கள் நடந்து கொண்டாலே போதும் உங்களுக்கு எந்த வியாதியும் வராது.

Categories

Tech |