Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே உடனே முந்துங்கள்…. இன்று காலை 7 மணி முதல்…. முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்களைத் தேடிச் சென்று ஆங்காங்கே தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது வரை 7 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதில் மக்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் சென்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர். ஒவ்வொரு முகாமிலும் அரசு நிர்ணயித்த இலக்கை விட அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் 8வது மெகா தடுப்பூசி முகாம் இன்று 50 ஆயிரம் இடங்களில் நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. இதுவரை தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டுள்ளது. இந்த மாதம் இறுதிக்குள் 100% தடுப்பூசி என்ற இலக்கை அரசு திட்டமிட்டுள்ளது.

Categories

Tech |