இன்றைய காலகட்டத்தில் தினம்தோறும் பல விதமான நூதன மோசடிகள் அரங்கேறிக்கொண்டே இருக்கின்றன. எங்கு பார்த்தாலும் ஆன்லைன் என்ற நிலை உருவாகி விட்டதால் மக்கள் அதனை எளிதில் பயன்படுத்தி விடுகின்றனர். ஆனால் அதனையே சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் ஹேக்கர்கள் பலவிதமான மோசடிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இது போன்ற மோசடிகளில் மக்கள் யாரும் சிக்க வேண்டாம் எனவும் தங்களுடைய தனிப்பட்ட தகவல்களை எதற்காகவும் யாரிடமும் பகிரக்கூடாது என அரசு தரப்பிலிருந்து தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் புது நெட் பேங்கிங் மோசடி குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென டிஜிபி சசேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ள அவர், ஓ டி பி மற்றும் பான் கார்டு எண் போன்ற விவரங்களை வாடிக்கையாளர்கள் பகிர வேண்டாம். கவனம் இல்லை என்றால் மொத்த பணத்தையும் திருடி விடுவார்கள். ஒருவேளை நீங்கள் ஏமாந்து விட்டால் 1930 என்ற எண்ணை அழைக்கவும் என அவர் கூறியுள்ளார்.