Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே உஷார்…. அசுர வேகத்தில் பரவும் டெங்கு…. சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலுக்கு 6,039 பேர் பாதிக்கப்பட்டு 8 பேர் உயிரிழந்தனர். இந்த ஆண்டில் 20 நாட்களில் 463 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வகை காய்ச்சலை பரப்பக்கூடிய ADS வகை கொசுக்கள் மழைக் காலங்களில் அதிகம் பெருக்கமடைகிறது. அந்த கொசுக்கள் மூலமாக 2019ல் தமிழகத்தில் 8,527 நபர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அதே சமயம் 2020ல் பாதிப்பு 75 % குறைந்து, 2,410 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பினர். இதனிடையில் சிக்குன் குனியாவால் 150, மலேரியாவால் 500, எலி காய்ச்சலால் 1,028, பாக்டீரியா தொற்று காய்ச்சலால் 2,220 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டில் 20 நாட்களில் 463 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் இது குறித்து பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது மாநிலம் முழுவதும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. காய்ச்சல் முகாம்களில் கொரோனாவுடன், டெங்கு, ஜிகா, சிக்குன்குனியா மற்றும் மலேரியா காய்ச்சல் கண்டறியப்பட்டால் தெரிவிக்கும்படி, மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா நோய்த் தடுப்பு பணியாளர்கள் டெங்கு தடுப்பிலும் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இதற்கிடையில் பொதுமக்கள் தங்கள் வீடு மற்றும் அருகாமை பகுதிகளை துாய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் கூறினர்.

Categories

Tech |