இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆன்லைன் மோசடிகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. தினம்தோறும் மோசடிக்காரர்கள் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மக்களிடம் தொடர்ந்து மோசடிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இது தொடர்பாக வங்கி தரப்பில் இருந்தும் அரசு தரப்பில் இருந்தும் பொது மக்களுக்கு தொடர்ந்து பல விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. மங்கி வாடிக்கையாளர்களின் மொபைல் எண்ணை பெற்று வங்கியில் இருந்து ஊழியர்களைப் போல பேசி வாடிக்கையாளரிடம் இருந்து தனிப்பட்ட வங்கி சார்ந்த தகவல்களை திருடும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இந்த விவரங்களை வைத்து வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் வங்கிகளில் இருந்து பணத்தை எடுத்து விடுகிறார்கள். இந்நிலையில் 4g சிம் வைத்திருப்பவர்கள் 5ஜி சிம் செல்போன் மூலம் அதனை அப்டேட் செய்ய வேண்டும் என கூறி மோசடி கும்பல் வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடி விடுகின்றனர். அதனால் பொதுமக்கள் அனைவரும் எச்சரிக்கையாக எடுக்க வேண்டும் எனவும் மோசடிவழகில் சிக்கியவர்கள் 1930 என்ற தொலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம் அல்லது புகார்களை www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.