Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே உஷார்…. இப்படி ஒரு மோசடி நடக்குது…. யாரும் ஏமாறாதீங்க….. டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் உயர் பொறுப்பில் இருப்பவர்களின் பெயரை பயன்படுத்தி மர்மகும்பல் மோசடியில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டுமென தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், பிரபலமான நபர்கள் மற்றும் பெரிய அதிகாரிகளின் படங்களை whatsapp dp யாக வைத்து அவர்களின் பெயரை பயன்படுத்தி மர்மகும்பல் மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

உயர் அதிகாரிகளின் பெயரில் அவர்களுக்கு கீழ் பணிபுரிவோரின் மொபைல் எண்ணுக்கு போன் செய்து நான் ஆலோசனை கூட்டத்தில் இருக்கிறேன் அமேசான் பரிசு கூப்பன் தேவைப்படுகிறது ஒரு கூப்பன் விலை பத்தாயிரம் ரூபாய் பத்து கூப்பன் வாங்கி அனுப்புங்கள் நான் அப்புறம் பணம் கொடுத்து விடுகிறேன் என்று கூறுகிறார்கள். ஒருவேளை நீங்கள் அது அனுப்ப தெரியாது என்று கூறினால் உங்களுக்கு ஒரு லிங்க் அனுப்பப்படும்.அதனை கிளிக் செய்து நீங்கள் ஒரு லட்சம் ரூபாய்க்கு பத்து கூப்பன் வாங்கி அனுப்பினால், இது போதாது இன்னும் இருபது பரிசு கூப்பன் வேண்டும் என குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

இதன் மூலம் ஐந்து லட்சம் ரூபாய் வரை மோசடி செய்ய முயற்சித்து வருகிறார்கள்.இப்படி உங்களின் மொபைல் ஃபோனுக்கு குறுஞ்செய்தி அல்லது whatsapp தகவல் யாராவது அனுப்பினால் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறையில் 100 மற்றும் 112க்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் காவல் உதவி செயலியை பதிவிறக்கம் செய்து ஆன்லைன் மோசடி என்ற இடத்தை தொட்டாலே போதும் 1930 என்ற எண்ணுக்கு அழைப்பு போய்விடும். இதனால் நீங்கள் உங்கள் பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்கலாம். இந்த புதுவித மோசடி கும்பலை தீவிரமாக தேடி வருவதாகவும் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என அவர் எச்சரித்துள்ளார்.

Categories

Tech |