Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே உஷார்…. உங்க போனுக்கு இது வந்தா நம்பாதீங்க…. வருமான வரித்துறை திடீர் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மோசடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பண மோசடி செய்யும் நோக்கில் வரும் இமெயில் மற்றும் கடிதங்களை நம்பி மக்கள் யாரும் ஏமாற வேண்டாம் என வருமானவரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வருமான வரித்துறை கவனத்திற்கு வந்துள்ள நிலையில் தொலைபேசி அழைப்புகளும் தவறாக வருவதாக புகார் அளித்துள்ளது.அதனால் தங்களின் வங்கி கணக்கில் இருந்து ஏதாவது தொகை, வரிஅல்லது வேறு ஏதாவது ஒரு வகையில் பணம் செலுத்துவது குறித்து ஈமெயில் அல்லது தொலைபேசி அழைப்புகள் ஏதாவது வந்தால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மேலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமானவரித்துறையின் www.tnincometax.gov.inஎன்ற இணையதளத்தில் உள்ள வருமானவரித்துறை இமெயில் முகவரி அல்லது தொலைபேசி எண் மூலமாக சரிபார்த்துக் கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் வருமானவரி துறையின் அதிகாரப்பூர்வ கடித பரிமாற்றம் அனைத்தும் DIN என்ற ஆவண அடையாள எண்ணை கொண்டிருக்கும் என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். எனவே மோசடி நபர்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |