Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே உஷார்…. உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…. கடும் எச்சரிக்கை….!!!!!

தமிழக மக்களுக்கு சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். OTP மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ மோசடியாக தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்க பட்டுவிட்டால் உடனடியாக புகார் அளிக்க தொலைபேசி எண்ணை அறிவித்துள்ளனர். அது மட்டுமல்லாமல் தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து மோசடி நபர்களின் வங்கி கணக்கிற்கு செலுத்தப்பட்ட பணத்தை அவர்கள் வெளியே எடுக்காதவாறு freeze செய்து தரப்படும் என்றும் பொதுமக்களிடம் தெரிவித்துள்ளனர்.

மேலும் பண மோசடி நடந்த 24 மணி நேரத்திற்குள் 155260 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்க வேண்டும் என சைபர் க்ரைம் காவல் நிலையம் விடுத்துள்ள எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேறு ஏதேனும் சைபர் குற்றங்கள் சம்பந்தமாக காவல் நிலையத்திற்கு நேரில் வராமல் https://www. cybercrime.gov.in என்ற வலைத்தளத்தில் புகார் அளிக்கலாம் என்று கூறியுள்ளது.

Categories

Tech |