Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே உஷார்… உருமாறிய கொரோனா இங்கேயும் வந்துடுச்சு… வெளியான பரபரப்பு தகவல்…!!!

பிரிட்டனில் இருந்து தமிழகத்திற்கு வந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் உருமாற்றம் அடைந்து உள்ள புதிய கொரோனா வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளன.

இதனையடுத்து கடந்த மாதம் நவம்பர் 25ஆம் தேதி முதல் டிசம்பர் 21ஆம் தேதி வரை ட்விட்டரில் இருந்து வந்த 2,230 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே இரண்டு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் தமிழகத்தில் ஐந்து பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இது புதிய வகை கொரோனா இல்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இருந்தாலும் பொதுமக்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |