தமிழகத்தில் அரசு உள்ளூர் வார்டு கவுன்சிலர் முதல்வர் வரை தனக்கு அனைவரையும் தெரியும் என பந்தா காட்டி பலரின் பணத்தை திருடி சுகபோக வாழ்வு வாழும் மோசடி பேர்வழிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தற்போதைய நிலையில் அரசு வேலை என்பது தேர்வு மூலம் எழுதி நேரடி நியமனம் மூலம் தான் கிடைக்கும். மோசடி பேர்வழிகளை நம்பி ஏமாற வேண்டாம் என அரசும் பலமுறை எச்சரித்தும் மக்கள் ஏமாறுவதும் தொடர்ந்துநடந்து கொண்டு தான் வருகிறது.
சென்னையைச் சேர்ந்த சர்க்கரை ராஜா என்பவர் ஓபிஎஸ் தனது சித்தப்பா எனக்கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளார்.பெரம்பலூரை சேர்ந்த சிவகுமாரிடம் ஓபிஎஸ் முதல் அரசியல் கட்சி தலைவர்கள் பலர் தனது தெரியும் என்று கூறி அவருடைய மனைவிக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ஆறு லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார். அதன் பிறகு காலம் தாழ்த்தியதால் சிவகுமார் புகார் அளித்துள்ளார். இது குறித்து விசாரித்த போது அவர் இதுபோல் ஒரு கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தப்பி ஓடிய சர்க்கரை ராஜாவை போலீசார் தேடி வருகின்றார்கள்.