தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் மின் தடை ஏற்பட்டது ஏன் என்பதற்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். அதில், முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடு மின் தொடரமைப்பு தலைமை அலுவலகத்தில் 24 மணி நேரம் செயல்படும் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம் திறந்து வைத்துள்ளார். அந்த சேவை மையத்தை 9498794987என்ற எண்ணில் தொடர்பு கொண்டு மக்கள் பயன் பெறலாம். தென் மாநிலங்களுக்கு மத்திய தொகுப்பிலிருந்து வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 மெகாவாட் திடீரென தடைபட்டது.
அதனால் சில இடங்களில் மின் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனை சமாளிக்க நமது மின்வாரியத்தின் உற்பத்தி திறனை உடனடியாக அதிகரித்து உள்ளோம். தனியாரிடமிருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனால் நகர்ப்புறங்களில் உடனடியாக நிலைமை சரி செய்யப்பட்டது. ஊரகப் பகுதிகளிலும் அடுத்த 15 நிமிடங்களில் நிலைமை சீரடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது என்று அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.