தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் குழந்தைகள் மற்றும் சிறுவர்களிடையே வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது மழைக்காலம். தொடங்கிய பின் வழக்கமாக காய்ச்சல் அதிகரிக்கும் என்றாலும் இந்த முறை இது மிக அதிகமாக உள்ளதாகவும், மருத்துவமனைகளில் காய்ச்சல் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சில குறிப்பிட்ட இன்ஃப்ளுயன்சா வைரஸ்களால் ஏற்படும் சுவாசக் கோளாறுகளால் இந்த ப்ளூ காய்ச்சல் ஏற்படுகிறது.
தற்போது பரவும் காய்ச்சல் சில நாட்களில் குணமாகிவிடும் என்றாலும், குழந்தைகளுக்கு அதிக சோர்வை அழிக்கிறது. ஏற்கனவே காய்ச்சல் பாதித்த குழந்தை அல்லது நபரின் மூச்சுக்காற்றில் கலந்திருக்கும் சளித்துளிகள் காற்றில் பரவி அடுத்தவருக்கு காய்ச்சல் தொற்றுகிறது. நோயாளிகளின் எச்சில் அல்லது சளியை தொட நேர்வதாலும் இது பரவ வாய்ப்புள்ளது. சுத்தமாக கை கழுவுவது , முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது இதனை தடுக்க உதவும். அது மட்டுமல்லாமல் காய்ச்சல் வந்தால் கட்டாயம் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.