தமிழகத்தில் இன்று முதல் குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் விநியோகம் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் இலவச வேஷ்டி சேலையுடன் பொங்கல் பரிசு தொகுப்பாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. அதனால் மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வார்கள். ஆனால் இந்த வருடம் கூடுதல் தொகையாக 2500 ரூபாய் பொங்கல் பரிசு வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது. அதைப் பெறுவதற்கான டோக்கன் வினியோகம் இன்று தொடங்கியுள்ளது.
பொங்கல் பரிசு பெறுவதற்கான டோக்கனை டிசம்பர் 30-ஆம் தேதி வரை வீடு தேடிச் சென்று ரேஷன் கடை ஊழியர்கள் விநியோகிக்க உள்ளனர். சுமார் 2.10 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு rs.2500 உடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் தரப்படும். அதனால் இந்த வருடம் பொதுமக்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்வார்கள். அரசின் இந்த அதிரடி அறிவிப்பு பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.