நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் படிப்படியாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. எனவே இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நாட்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் தமிழக மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் அறிவுறுத்தியுள்ளார். தனியார் மருத்துவமனைகளின் படுக்கைகள் இல்லை. அரசு மருத்துவமனைகள் நிரம்பி உள்ளன. படுக்கைகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா வேகத்தில் பரவிவருகிறது. சூழ்நிலை மோசமாக செல்ல உள்ளதாக கட்டாயம் தடுப்பூசி அவசியம் என்று வலியுறுத்தியுள்ளார்.