கொரோனா தொற்று பிரிட்டன், சிங்கப்பூரில் அதிகரித்து வருவதனால் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னை சைதாப்பேட்டை எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 174 ஆவது வார்டு மடுவின்கரை பாரதி தெருவில் 30,லட்சம் ரூபாய் செலவில் நவீன உபகரணங்களுடன் கூடிய உடற்பயிற்சி கூடத்தை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், சிங்கப்பூரில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் இப்போது அதிகரித்து வருகிறது. மேலும் பிரிட்டனில் 40, ஆயிரம் அளவிற்கு கொரோனா தொற்று உயர்ந்துள்ளது. அதனால் மக்கள் அனைவரும் கைகளை நன்றாக கழுவுவது, முக கவசம் அணிவது, சனிடைசர் பயன்படுத்துவது, சோப்பு உபயோகிப்பது ஆகியவற்றை ஒழுங்காகப் பின்பற்ற வேண்டும். தமிழகத்தில் இன்னும் 5.70 கோடி தடுப்பூசிகள் போட வேண்டியுள்ளது. குறிப்பாக 57 லட்சம் பேர் 2 வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
வரும் 23ஆம் தேதி நடைபெறும் தடுப்பூசி முகாமில் 2- ஆம் தவணை தடுப்பூசி 25 இலட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்வார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது. டெங்கு காய்ச்சலில் 340 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.