பெருந்துறையில் 167.5 கோடியில் 63 ஆயிரத்து 858 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். பெருந்துறையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு முதல்வர் ஸ்டாலின் உரையாற்றியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, வரலாற்று பெருமை கொண்ட ஊர் பெருந்துறை பெருந்துறை அருகே தமிழ் சங்கம் செயல்பட்டதாக செப்பேடு சொல்கின்றது. மேலும் ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும் கடந்த ஒரு ஓராண்டு காலத்தில் ஒவ்வொரு துறை சார்பிலும் ஏராளமான திட்ட பணிகள் ஈரோடு மாவட்டத்திற்கு செய்யப்பட்டிருக்கிறது. அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட கொடிவேரி கூட்டநீர் திட்டம் செயல்படுத்தப்படும் பெருந்துறை அரசு மருத்துவமனையில் 261 படுக்கைகள் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஈரோடு மாவட்டத்தில் இரண்டு பேருந்து நிலையங்கள் அமைக்க பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் வேளாண் உற்பத்தியை அதிகரிப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் எல்லாவற்றிலும் முதன்மை மாவட்டமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஈரோடு மாவட்டத்தில் வேளாண் உற்பத்தியை அதிகரிக்க 16 கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். மேலும் எனது உயிர் இருக்கும் வரை உழைத்துக் கொண்டே தான் இருப்பேன் புதிய புகழ் எனக்கு தேவையில்லை இருக்கும் புகழே எனக்கு போதும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
Categories