Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. ஒட்டகப் பாலில் டீ…. இனி இங்கேயே கிடைக்கும்…. உடனே கிளம்புங்க…!!!

கோவை நீலம்பூரை அடுத்த குளத்தூரில் ஒட்டகப் பாலில் டீ போட்டு விற்று வருகிறார் ஒட்டக பண்ணை உரிமையாளர் மணிகண்டன். குஜராத்தில் இருந்து ஆறு ஒட்டகங்களை வாங்கி வந்த மணிகண்டன், ஒட்டகப் பண்ணை அமைத்து உள்ளார். பாலை லிட்டர் 450 ரூபாய்க்கு விற்பதுடன், ஒட்டகப் பாலில் டீ, காபி மற்றும் ரோஸ்மில்க் ஆகியவற்றை தயாரித்து விற்பனையும் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தென்னிந்தியாவில் முதல் முறையாக கோவையில் ஒட்டகை பாலில் டீ விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனைத் தவிர ஒட்டகத்தை காண வரும் மக்களை கவர்வதற்காக அங்கேயே குதிரை, முயல், வாத்து மற்றும் மீன்களை வளர்த்து வருகிறார் மணிகண்டன். சர்க்கரை நோயாளிகள் ஒட்டகப் பால் குடித்து வந்தால் சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும் என்பதை பலரும் அறிந்திருப்போம்.

Categories

Tech |