Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. குடிநீர் இணைப்பு விரைவில் பெற…. இத மட்டும் பண்ணுங்க போதும்……!!!!

தமிழ்நாட்டில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பஞ்சாயத்துகளில் குடிநீர் இணைப்பு கோரி, விண்ணப்பித்த ஏழு நாட்களுக்குள்ளும், தொழில் நுட்ப காரணங்களால் சிரமம் இருந்தால், ஒரு மாதத்திற்குள் இணைப்பு வழங்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. குடிநீர் இணைப்பு வழங்குவதில் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.

புதிய குடிநீர் இணைப்புக்கான படிவம், சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படும், இப்படிவத்தில் டெபாசிட் கட்டணம்,  வீட்டு பயன்பாடு, வீட்டு பயன்பாடு அல்லாதவை, நகராட்சிக்கு செலுத்தும்கட்டணங்கள் என கட்டணம் தொடர்பான தேவையான விவரங்கள் இருக்கும்.  இங்கு விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து, விண்ணப்பப் படிவத்துடன் தேவையான தகவல்கள் மற்றும் ஆவணங்களுடன் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும்.

 

குடிநீர் இணைப்பு கட்டணம், இடத்திற்கு ஏற்றவாறு மாறுபடும். உதாரணமாக, 30 மீட்டர் நீள கருங்கல் ஜல்லி சாலையாக இருந்தால் 1,050 ரூபாய், தார் ரோட்டிற்கு 2,250, சிமென்ட் ரோட்டிற்கு 2,600, 30 மீட்டர் முதல் 90 மீட்டர் நீளம் வரை கருங்கல் ஜல்லி ரோட்டிற்கு 1,650, சாலைக்கு 2,850, சிமென்ட் போடப்பட்ட சாலைக்கு 3200 ரூபாய் என கட்டணம் விதிக்கப்படும். இது, தண்ணீருக்கான குழாய் இணைப்பு கொடுப்பதற்காக அரசு செய்யும் பணிகளுக்கான செலவு என்பது குறிப்பிடத்தக்கது.

குடிநீர் இணைப்பு கோரி விண்ணப்பித்த பிறகு, விண்ணப்பதாரர் குடிநீர் இணைப்பை பெறுவதற்கு தேவையான குழாய்களை பதித்து விட்டு, மாநகராட்சி, நகராட்சி பொறியாளருக்கு அதனை எழுத்து மூலம் தெரிவிக்க வேண்டும். விண்ணப்பதாரரிடம் இருந்து முறையான தகவல் பெற்றவுடன், சம்மந்தப்பட்ட அலுவலர்கள் நேரடியாக வந்து சரிபார்த்து, புதிய குடிநீர் இணைப்பை வழங்குவார்கள்.

 

Categories

Tech |