தமிழக மக்கள் கொரோனா பாதிப்பு குறைகிறது என சாதாரணமாக எண்ணி விடக்கூடாது என விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர்களை எடுத்து வருகிறது. அதனால் உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் சில நாடுகளில் கொரோனா இரண்டாவது மற்றும் மூன்றாவது அலைகள் தொடங்கியுள்ளன. இதனை அடுத்து தமிழகத்தில் முதலில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து கொண்டே வருகிறது.
இதுபற்றி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைகிறது என மக்கள் சாதாரணமாக எண்ணி விடக்கூடாது. தமிழகத்திற்கு கொரோனா பாதிப்பு வராமல் இருக்க அனைவரும் முககவசம் அணிவதை கட்டாயமாக்கி கொண்டு முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.