தமிழகத்தில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செப்டம்பர் மாதத்தில் இறுதிவரை மட்டுமே இலவசமாக செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 75 நாட்களுக்கு இலவசமாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்த நிலையில் தற்போது அனைத்து மாநிலங்களிலும் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் செப்டம்பர் மாதத்தில் இறுதிவரை மட்டுமே இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் அதற்கு பிறகு அரசு நிர்ணயித்துள்ள 360 ரூபாய் கொடுத்து தனியார் மருத்துவமனையில் செலுத்திக் கொள்ளலாம் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,தமிழகத்தில் செப்டம்பர் மாதத்தில் வாரந்தோறும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும்.பூஸ்டர் தடுப்பூசி செலுத்த தகுதியான மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அமைச்சர் அறிவுருத்தியுள்ளார்.