தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் வழங்கப்பட்டுள்ள நகைக்கடைகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் 95% பணிகள் நிறைவு பெற்று விட்டதாக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நகை கடன் தள்ளுபடி அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் அதிகமாக இருந்தது. ஆட்சிக்கு வந்த பிறகு கடன் விவரங்களை ஆய்வு செய்தபோது அதில் பல்வேறு ஊழல்கள் நடை பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற எண்ணத்தில் தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் ஒரே நபர் எண்ணற்ற வங்கிகளில் கடன் பெற்று இருப்பது தெரியவந்தது.
எனவே இது குறித்து ஆய்வு செய்து தகுதி வாய்ந்தவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதனால் நோய் கடன் பெற்றவர்களின் விவரங்கள் வங்கிகளால் சேகரிக்கப்பட்டு வந்தன. தற்போது நகை கடன் தள்ளுபடி அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களின் மொத்த நகை கடன் 85 ஆயிரம் கோடி என்று கூட்டுறவு சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர், தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் வழங்கப்பட்ட நகரங்களில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் 95% பணிகள் முடிவடைந்து விட்டது. விவசாயிகளுக்கு வருகின்ற ஜூன் மாதத்திற்குள் 2500 கோடி பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் 75 கூட்டுறவு மலிவு விலை மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளது. விரைவில் நகை கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியாகும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.