Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. நெகிழி பொருட்களை பயன்படுத்த வேண்டாம்…. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்….!!!

தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு முறை  மட்டும் பயன்படுத்தப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கப்படும் நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்களை தவிர்த்து சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

அது மட்டுமில்லாமல் உயர் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தேனீர் கோப்பைகள், பிளாஸ்டிக் பைகள்,பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் தட்டுகள் மற்றும் பிளாஸ்டிக் கூடைகள் ஆகியவை சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும். பொதுமக்களும் பிளாஸ்டிக்கில் உருவான பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |