Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. பிப்ரவரி 25 முதல்… காங்கிரஸ் கட்சி அறிவிப்பு…!!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் அடுத்த வாரம் தேர்தல் குறித்த தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோர் பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் மார்ச் 5ஆம் தேதி வரை விருப்ப மனுவை பெறலாம். பொது தொகுதிக்கு 5 ஆயிரம், தனித்தொகுதி மற்றும் மக்கள் தொகுதிக்கு 2500 நன்கொடையாக கொடுக்க வேண்டும். விண்ணப்ப படிவம் பெறுவதற்கு 100 ரூபாய் கட்டணம். நன்கொடை கட்டணம், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் மற்றும் பான் கார்டு நகலை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |