தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு காரணமாகவும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன ர். இந்நிலையில் ஹோட்டலில் சாப்பிடும் உணவுப் பொருட்களின் விலையை 10 சதவீதம் உயர்த்தப்போவதாக ஹோட்டல் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
ஏப்ரல் 6-ஆம் தேதி நடக்கும் ஓட்டல் அதிபர்கள் கூட்டத்தில் இது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது. இதனால் இட்லி, பூரி, பொங்கல் விலை ரூபாய் 5 ம், சாப்பாடு, பிரியாணி வகைகள் ரூ.20 ம் உயரக்கூடும் என்கின்றனர். வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு காரணமாக இந்த விலை உயர்த்தப்பட உள்ளதாக கூறுகின்றனர்.