Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…! பொங்கலுக்கு அரசு வெளியிடப்போகும் ஜாக்பாட் அறிவிப்பு…. ரெடியா இருங்க…!!!

தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு தமிழக ரேஷன் கடைகள் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையின் போது இலவச வேஷ்டி, சேலை மற்றும் மளிகை பொருட்கள், பொங்கல் செய்ய தேவையான பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த வருடம் பொங்கல் பரிசு தொகுப்பாக 21 மளிகை பொருட்களோடு ஒரு முழு கரும்பு மற்றும் இலவச வேஷ்டி, சேலை அளிக்கப்பட்டது.

ஆனால் அந்த பொருட்கள் அனைத்தும் தரம் அற்றதாக இருந்ததாகவும் முறையாக வழங்கப்படவில்லை என்றும் புகார்கள் எழுந்தது. இதனால் வரும் 2023 ஆம் வருடம் பொங்கலுக்கான சிறப்பு அறிவிப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாகி விடும் என்றும் கடந்த வருடத்தை போல இல்லாமல் இந்த வருடம் பொங்கல் பரிசாக ரொக்க பணம் அளிக்க அரசு திட்டமிட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அறிவிப்பு முதல்வர் விரைவில் வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

Categories

Tech |