Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே….! பொங்கல் பரிசுத்தொகை பெற இது கட்டாயம்…. அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருள்களும், சமையலுக்கு தேவையான மளிகை பொருட்களும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கபட்டது.

இந்த நிலையில் கடந்த வருடம் பொங்கல் பரிசு தொகப்பில் முறைகேடு நடந்ததாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதால் இந்த வருடம் பணத்தை ரொக்கமாக வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. பொங்கல் பரிசாக 1000 ரூபாய் பணத்தை மக்கள் நேரடியாக பெற்ற நிலையில் இந்த வருடம் பொங்கலுக்கு நேரடியாக பொதுமக்களுடைய வங்கி கணக்கில் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் வங்கி கணக்கு இல்லாமல் இருப்பவர்கள் உடனே வங்கி கணக்கு தொடங்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு 45 நாட்கள் மட்டும் உள்ள நிலையில் அதற்கு முன்னதாக வங்கி தொடர்பான பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |