தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். இத்திட்டத்தை ஜனவரி 2ஆம் தேதி சென்னையில் முதல்வர் தொடங்கி வைக்கிறார். ரொக்கப் பணத்தோடு ஒரு கிலோ பச்சரிசியும், ஒரு கிலோ சர்க்கரையும், கரும்பும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசுத்தொகுப்பானது ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும்.
இந்நிலையில் பொங்கல் பரிசில் ஏதாவது குளறுபடி இருந்தால் 1967 மற்றும் 1800 425 5901 என்ற எண்களில் புகார் தெரிவிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த முறை விநியோகிக்கப்பட்ட பொங்கல் பொருட்கள் தரமற்றவையாக இருந்ததாக பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதனால் அவற்றை நீக்கிவிட்டு அரிசி, சர்க்கரை, கரும்பு மட்டும் வழங்க இருக்கிறது அரசு. இதிலும் புகார்கள் இருந்தால் அந்த எண்களுக்கு போன் பண்ணுங்க.