பொங்கல் பரிசு மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பை ஜனவரி 13ல் வழங்கி முடிக்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சியருக்கு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. பொங்கல் பரிசு மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு பெற டிசம்பர் 26 முதல் டிசம்பர் 30 வரை டோக்கன் விநியோகிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களையும், சலுகைகளையும் அறிவித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வழக்கமாக வழங்கி வரும் பொங்கல் பரிசை உயர்த்தி ரூபாய் 2500 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்றும், ஒரு துண்டு கரும்புக்கு பதிலாக முழு கருப்பு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்திருந்தார். தற்போது இது தொடர்பான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.