Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே மறந்து விடாதீங்க…. முதல்வர் சொன்ன 3 முக்கிய விஷயங்கள்…..!!!!

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி 15 -18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத்துறை வெளியிட்டது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் பள்ளி, மற்றும் கல்லூரிகளில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதல்வர் முக.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து பேசிய முதல்வர், தற்போது 3 விஷங்களை பொதுமக்களுக்கு கூற விரும்புகிறேன். ஒமிக்ரான் வைரஸில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள அனைவரும் முககவசம் அணிய வேண்டும். மேலும் அனைத்து தரப்பினரும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டோர் தவறாமல்  2 டோஸ்களையும் செலுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். கொரோனாவில் இருந்து தமிழகம் மீண்டு வர அரசு நடவடிக்கை எடுத்தால் மட்டும் போதாது. பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Categories

Tech |