தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதும் ஊரடங்கு உட்பட பல கட்டுப்பாடுகளை அரசு அறிவித்தது. கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனை யடுத்து மத்திய அரசு பிறப்பித்த அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளது. அதேபோன்று தமிழகத்தில் தற்போது பொதுயிடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே வரவேண்டும் என்ற உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது. எனினும் முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகள் நீக்கப்படவில்லை. ஆகவே பொதுமக்கள் அனைவரும் தொடர்ந்து முக்கவசம் அணிதல் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
தமிழகத்தில் முதல் 2-வது தவணை மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த தகுதியானவர்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஹீமோபிலியா எனப்படும் ரத்தம் உறையா நோய் நாள் நிகழ்வில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 88 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். அதன்பின் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது “ஹீமோபிலியா நோயால் 1,800 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2010 ஆம் வருடம் முன்னாள் முதல்வர் கலைஞர், இந்த நோயாளிகளுக்கு இலவச தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்த ஹீமோபிலியா பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கைகள் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். அதனை தொடர்ந்து தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதன் காரணமாக 82% பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருக்கிறது. தொற்று பாதிப்பு குறைந்து விட்டாலும் கொரோனா முடிவுக்கு வந்துவிட்டது என்று அர்த்தம் கிடையாது. மக்கள் முகக்கவசம் அணிய வேண்டியது அவசியமில்லை என்பது குறித்து வெளியான தகவல் உண்மையில்லை. ஆகவே மக்கள் முகக்கவசம் அணிவது குறித்து விலக்கு அளிக்கப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.