தமிழகத்தில் ஜூலை மாதத்திற்கான மின் கட்டணம் இரண்டு மடங்கு, மூன்று மடங்கு வந்துள்ளதாக பொதுமக்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நான்கு மாதங்களுக்கு சேர்த்து கணக்கீடு செய்துள்ளதால் இவ்வாறு அதிக கட்டணம் வந்துள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். அதனால் பொதுமக்களிடம் மிகப்பெரிய குழப்பம் நிலவுகிறது.
இதுகுறித்து மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, மின்சார கட்டணம் அதிகமாக இருப்பதாக வந்த 14 லட்சம் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, மின்சார கட்டணம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மின் கட்டணம் இரண்டு மடங்கு மூன்று மடங்கு வந்துள்ளதாக புகார்கள் அதிகமாக வந்துள்ள நிலையில் அதிக மின்கட்டணம் வருவதாக கருதும் நுகர்வோர் 9498794987 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.
மேலும் பொதுமக்கள் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக தொடங்கப்பட்டுள்ள மின் நுகர்வோர் சேவை மையத்தில் 9498794987என்ற செல்போன் எண் மூலம் இதுவரை ஒரு லட்சத்து 71 ஆயிரம் புகார்கள் பெறப்பட்டு, அதில் ஒரு லட்சத்து 59 ஆயிரம் புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கிடும் செய்யப்படும் என்ற வாக்குறுதி படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று அவர் கூறியுள்ளார்.