Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. மின்சார மானியத்தில் மாற்றம் இல்லை…. அரசு முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் புதிய மின் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. 2027 வரை புதிய மின் கட்டண உயர்வு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 ஆண்டுகளுக்குப் பின் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய மின்கட்டண உயர்வில் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இனி 101 – 200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு மாதம் 27.50 என 2 மாதங்களுக்கு சேர்த்து 355 ரூபாயும், 201 – 300 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு 2 மாதங்களுக்கு சேர்த்து ரூ.145 ரூபாயும், 301- 400 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு 2 மாதங்களுக்கு சேர்த்து 295 கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ள நிலையில் 100 யூனிட் வரையிலான இலவச மின்சார திட்டமும் குடிசை, விவசாயம்,கைத்தறி மற்றும் விசைத்தறி முதலியவற்றை மின்சார மானியம் தொடரும் என தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது.மேலும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை ஊக்குவிக்க பத்து சதவீதம் கூடுதல் கட்டணத்துடன் பசுமை கட்டணம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |