Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு….. இன்று முதல் டிசம்பர் 31 வரை சிறப்பு முகாம்….!!!!

தமிழகத்தில் உள்ள மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது தற்போது கட்டாயமாகப்பட்டுள்ளது. மின்சார மானியம் பெறுவதற்கு மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு கட்டாயமாகும். ஆதார் எண்ணை இணைப்பதற்கு மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பாக சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. அதற்காக https://adhar.tnebltd.org/adharupload/ என்ற புதிய இணையதள பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் நேரடியாக மின்கட்டணம் செலுத்தக்கூடிய வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் அட்டை நகலை எடுத்துச் சென்று மின் கட்டணம் செலுத்தும் போது ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம்.

இந்நிலையில் மின் நுகர்வோர் தங்கள் மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு இன்று  முதல் அதாவது நவம்பர் 28ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். பண்டிகை நாட்களைத் தவிர ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து நாட்களிலும் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |