தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா தொற்று பரவல் உச்சம் தொடங்கியது. இதனால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பயனாக கொரோனா தொற்று சற்று சீரடைந்து வருகிறது. இதனால் தமிழக அரசு கொரோனா கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளில் மேலும் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது மார்ச் 3 (நாளை) முதல் வரும் 31-ஆம் தேதி வரை கட்டுப்பாடுகளில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி திருமண நிகழ்வுகளுக்கு 500 பேர் வரை அனுமதிக்கப்படுவர். இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு 250 பேர் வரை அனுமதிக்கப்படுவார்கள். அரசியல், கலாசார, சமுதாயக் கூடங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை மார்ச் 3 ஆம் தேதி நாளை முதல் நீக்கப்படுகிறது.
இதற்கிடையில் தமிழகத்தில் பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முகக்வசம் அணிவதை பொதுமக்கள் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், விரைவில் பூஜ்ஜியத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.