Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே!…. மே 20 ஆம் தேதி முதல் 5 நாட்கள்…. வெளியான ஹேப்பி நியூஸ்…..!!!!!

கடந்த 2 வருடங்களாக கொரோனா காரணமாக மலர் கண்காட்சி விழாக்கள் ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு 124-வது மலர் கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி நீலகிரி மாவட்டத்திலுள்ள உதகையில் 124வது மலர் கண்காட்சி மே மாதம் 20ஆம் தேதி துவங்கி 5 நாட்களுக்கு நடைபெற இருப்பதாக தோட்டக்கலைத்துறை ஆணையர் பிருந்தா தேவி அறிவித்துள்ளார்.

அதாவது ஊட்டி மலர் கண்காட்சி வருகிற மே 20ஆம் தேதியில் இருந்து 24ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதில் மே 7 மாற்றும் 8ஆம் தேதி காய்கறி கண்காட்சியும், மே 14, 15ல் ரோஜா கண்காட்சியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து குன்னுர் சிம்ஸ் பூங்காவில் 62-வது பழக் கண்காட்சி மே 28, 29 போன்ற தேதிகளில் நடைபெறும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

Categories

Tech |