Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே யாரும் போகாதீங்க…. இன்று (பிப்…26) கிடையாது…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!!

போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற இருப்பதால் பிப்..26, 27ம் தேதிகளில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றை தடுக்க ஞாயிறுதோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்கி கடந்த 12ம் தேதி வரை, 23 மெகா முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து கடந்த 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்பட்டது.

எனினும் இந்த வாரம் நடத்த வேண்டிய 24வது மெகா தடுப்பூசி முகாம் தொடர்பாக அறிவிப்பு வெளிவரவில்லை. இது குறித்து சுகாதாரத்துறை உயரதிகாரிகள் கூறியபோது, பிப்..27ம் தேதி(நாளை) 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கிறது. ஆகவே அந்த நாளில் தடுப்பூசி முகாம் நடத்த முடியாது. இதன் காரணமாக பிப்..26, 27 ஆகிய நாட்களில் தடுப்பூசி முகாம் நடைபெறாது என்று கூறினர்.

Categories

Tech |