Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. யார் கேட்டாலும் இதை மட்டும் சொல்லாதீங்க…. டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆன்லைன் மோசடிகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. தினம்தோறும் மோசடிக்காரர்கள் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மக்களிடம் தொடர்ந்து மோசடிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இது தொடர்பாக வங்கி தரப்பில் இருந்தும் அரசு தரப்பில் இருந்தும் பொது மக்களுக்கு தொடர்ந்து பல விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிஜிபி சைலேந்திரபாபு, இணைய வழியில் நடைபெறும் மோசடியால் ஏமாறாமல் இருக்குமாறு எச்சரித்துள்ளார். மின் இணைப்பு மற்றும் ஆதார் இணைப்பு என்று தொடர்பு கொள்வார்கள். நெட்பேங்கிங்கில் பான் கார்டு இணைக்க வேண்டும் என்று பணத்தை திருடுவார்கள். வங்கியில் இருந்து பேசுவதாக கூறி வங்கி கணக்கு எண், ஓடிபி மற்றும் பின் நம்பரை கேட்பார்கள். அப்படி கேட்டால் யாரும் தராமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |