Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே ரெடியா இருங்க…. அனைவருக்கும் ரூ.2000…. அசத்தல் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி பகல் 12 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டு அந்தக் கட்டுப்பாடுகள் தற்போது நடைமுறையில் உள்ளது. ஆனால் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்து நெருங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தப் படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி மக்கள் தேவையில்லாமல் வெளியில் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்ட ஸ்டாலின், முக்கியமான 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் ஒன்றுதான் அனைத்து குடும்ப அட்டைகளுக்கு 4000 ரூபாய். அதன்படி வருகின்ற திங்கட்கிழமை முதல் அனைத்து அரிசி குடும்ப அட்டைகளும் ரூ.2000 வழங்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். ரேஷன் கடைகளில் தினமும் 200 பேருக்கு டோக்கன் வழங்கப்படும். டோக்கன் கடையில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரங்களில் 2000 ரூபாயை அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |