தமிழகத்தில் உள்ள மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது தற்போது கட்டாயமாகப்பட்டுள்ளது. மின்சார மானியம் பெறுவதற்கு மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு கட்டாயமாகும். ஆதார் எண்ணை இணைப்பதற்கு மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பாக சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. அதற்காக https://adhar.tnebltd.org/adharupload/ என்ற புதிய இணையதள பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் நேரடியாக மின்கட்டணம் செலுத்தக்கூடிய வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் அட்டை நகலை எடுத்துச் சென்று மின் கட்டணம் செலுத்தும் போது ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம்.
இந்நிலையில் மின் இணைப்பு என்னுடன் ஆதார இணைப்பதற்கு மற்றும் பெயர் மாற்றம் செய்வதற்காக விரைவில் சிறப்பு முகாம் அமைக்கப்படும் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். மின் இணைப்பில் பெயர் உள்ளவர்கள் இறந்து போயிருந்தால் அவர்களுக்கு கூடுதல் அவகாசம் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். மேலும் 100% பயனாளர்களுக்கும் மின் இணைப்பு என்னுடன் ஆதார இணைக்க வேண்டியது அவசியம் எனவும் கூறியுள்ளார்.