Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே ரெடியா இருங்க…. ஊரடங்கில் சூப்பர் தளர்வு…. அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் இந்தாண்டுக்கான புத்தக கண்காட்சி சென்னை நந்தனத்திலுள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜனவரி 6 -ம் தேதி தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் அறிவித்திருந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக புத்தக கண்காட்சி ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், தற்போது பாதிப்பு குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் பிப்.. 16 – மார்ச் 6 வரையிலும் புத்தக கண்காட்சி நடத்துவதற்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக 65 வயதுக்கு மேற்பட்டோர், கர்ப்பிணிகள், கைக்குழந்தைகளுடன் வருபவர்கள் புத்தக கண்காட்சியில் அனுமதிக்கப்பட மாட்டார்கள என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கூட்ட நெரிசலை தவிர்க்க ஆன்லைன் மூலமாக பணம் செலுத்தி நுழைவுச் சீட்டு கொடுக்கலாம் என்றும் தமிழக அரசு சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாசகா்களுக்காகவே அச்சடிக்கப்பட்ட ரூபாய் 100 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கின்றன. ஆகவே பபாசி சார்பாக வருடந்தோறும் நடத்தப்படும் சென்னை புத்தகக் காட்சியை பிப்ரவரி, மாா்ச் மாதங்களில் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கத்தினா் (பபாசி) கடந்த செவ்வாய் அன்று முதல்வா் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |